ஆரோக்கியம் அவசியமே


-வீடூ நேச்சுரல்ஸ் மேலாண் இயக்குனர் திரு. கண்ணன்


இன்றைய சூழலில் மனிதர்கள் அன்றாட வாழ்க்கையை ஆரோக்கியமாக  நகர்த்திட தவம்
இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. உணவுகலப்படம் என்பது எல்லா இடங்களிலும் ஊடுருவி மனித வாழ்க்கையை துவம்சமாக்கிவிட்டது. விதையிலிருந்து கலப்படம் துவங்கவில்லை, அதையும் தாண்டி விளையும் மண்ணையும் மலடாக்கிவிட்டார்கள்.


தனி மனித ஆரோக்கியத்தையும், வீட்டில் உள்ள அனைவரும் நலமாய் வாழவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு உருவானதே வீடூ நேச்சுரல்ஸ் நிறுவனம். சென்னை அம்பத்தூரை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி,  இந்நிறுவனமேலாண் இயக்குனர் திரு கண்ணன் அவர்கள் கூறுகையில்…


எங்கள் நிறுவனம் நல்ல பொருட்களை,தரமாக, சுத்தமாக தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. தரமான பொருட்களை சற்று விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை எனவாங்கும் மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும். தரக்குறைவான பொருட்களை தவிர்த்தால், நாமெல்லாம்  நலமாய்  வாழ முடியும்.


உணவு கலப்படம் என்பதை உடனடியாக உணர jjமுடியாது, ஆக மெல்லக் கொல்லும் விஷம் தான் கலப்படம். நாங்கள் பல தொழில்களில் வெற்றிகரமாக பயணித்து வந்தாலும்,மன நிறைவுடன் தொடரும் தொழில் தேவை என்பதால் இந்த உணவுத் தயாரிப்பு தொழிலை, குறிப்பாக எண்ணெய்  தயாரிப்பை துவங்கினோம்.வாகை மர  செக்கு மூலமாக, தரமான எண்ணெய் வித்துக்களை வாங்கி, வாடிக்கையாளர்  கண்ணெதிரிலேயே நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தயாரிக்க துவங்கினோம். உணவுக்கு சுவையை கூட்டி தரக்கூடிய தயாரிப்பாக எங்களது எண்ணெய்கள் வெளிவந்தது. சிறந்த முறையில் சந்தைப்படுத்தி வருகிறோம். 





தயாரிப்பு திருப்தியாகவந்ததால் அடுத்து என்ன செய்யலாம்என யோசித்தோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நூடுல்ஸ் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியம் கொண்டு தயாரிப்பது என முடிவு செய்து,  தயாரிக்க நிறைய ஆராய்ச்சி செய்து,  சாமை, வரகு,திணை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகுஎன சத்து மிகுந்த தானியங்களை மூலப்பொருட்களாகக் கொண்டு உருவானதுதான் எங்கள் ‘’வீடூ’’நூடுல்ஸ். உபயோகித்தவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுவையால் சுண்டி இழுக்கப் பட்டு பலரும் தொடர்ந்து உபயோகப் படுத்தத் துவங்கினர்.தற்போது தமிழகம் முழுவதும் எங்கள்எண்ணெய் வகைகளையும்,நூடுல்ஸ்களையும் மார்க்கெட்டிங் செய்து வருகிறோம்.  சோடியம் போன்ற பொருட்களை சேர்க்காமல் ஆரோக்கியத்தையும் மையமாக 
வைத்து இந்த நூடுல்சை தயாரிக்கிறோம்.


அடுத்ததாக மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கிறோம். நல்ல மணமாகவும், தரமாகவும் இருப்பதால் இதை சந்தைப்படுத்துவது எளிதாக இருந்தது. ரோஸ் நறுமண தெளிப்பான்களையும் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறோம்.100% சுத்தமான, தரமான திரவியமாகதருகிறோம் எங்கள் பொருட்கள் தயாரிப்புகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்துள்ளோம்.சந்தையில் எங்கள் விலை சற்று கூடுதல்தான்,  குடும்ப உறுப்பினர்கள் நலன், உடல் நலம் இவற்றை மனதில் கொண்டு தரமான பொருட்களை வாங்க சற்று விலை கூடுதலாக கொடுக்க தயங்கக்கூடாது. ஆரோக்கியம்  
அவசியமல்லவா?  தமிழகம் முழுவதும் டீலர், டிஸ்ட்ரிபியூட்டர்கள் இல்லாதஇடங்களில் புதிதாக நியமித்து வருகிறோம். தரமான பொருள்களை சந்தைப்படுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். (தொடர்புக்கு: Ph: +91-94980 88000 / 044- 2657 2704 Email: vdonaturalss@gmail.com www.vdonaturalss.com)