காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் உலக தமிழ் மொழி அறக்கட்டளை சார்பில் வள்ளுவர் அறிவகம் (நூலகம்) அடிக்கல் நாட்டு விழா 26.12.2019 அன்று நடைபெற்றது. விழாவிற்கு குமார் குமாரப்பன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா, சுப.வீரபாண்டியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். விழாவில் ஈரோடு புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் குணசேகரன், அமெரிக்க வட்டார தமிழ் சங்க துணைத்தலைவர் குழந்தைவேல் ராம சாமி, வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் சுந்தர குப்புசாமி, மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், லெட்சுமி ஆச்சி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமிர்தகணேசன் எழுதிய ‘அமெரிக்காவின் அகரத் தமிழன்’ என்ற புத்தகத்தை மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வெளியிட குமார் குமாரப்பன் பெற்றுக்கொண்டார்.தொடர்ந்து டாக்டர் கிருஷ்ணன், ஆறுமுகம், ராமசெல்லப்பன், ஆயிக்கவுண்டன், பாபு ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
முன்னதாக, காணொலிகாட்சி மூலம் சிகாகோவிலிருந்து முனைவா் அழகப்பா ராம்மோகன் வரவேற்றார், முடிவில் மீனாட்சி ராமமோகன் நன்றி கூறினார்.