இந்த ஆண்டின் சிறந்த பிஸினஸ் மனிதர்

முதலிடத்தில் இந்தியர் 


 


2019ம் ஆண்டின் சிறந்த பிஸினஸ் மனிதர்களுக்கான பட்டியலில் இந்தியாவில் பிறந்தவரான சத்ய நாதள்ளா முதலிடம் பிடித்துள்ளார்.


உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் Fortune இதழ், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பிஸினஸ் மனிதர்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.


இப்பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியாவில் பிறந்தவருமான சத்ய நாதள்ளா முதலிடத்தை பெற்றுள்ளார். மைக்ரோசாஃப்டின் சிஇஓவாக கடந்த 2014ம் ஆண்டு முதல் சத்ய நாதள்ளா இருந்து வருகிறார்.


வியக்கத்தக்க சாதனைகள், முடியாததையும் முடித்துக் காட்டுவது, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கண்டறிவது போன்ற காரணிகளை கொண்டு இப்பட்டியல் வெளியாகி உள்ளது.


இப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் Fortescue Metals Group-ஐ சேர்ந்த Elizabeth Gaines 2ம் இடமும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 2,500 உணவகங்களுக்கு மேல் வெற்றிகரமாக வழிநடத்தி வரும் Chipotle Mexican Grill நிறுவன சிஇஓ Brian Niccol 3ம் இடமும் பிடித்துள்ளனர்.


 Synchrony Financial நிறுவன சிஇஓ Margaret Keane 4ம் இடமும், Puma நிறுவனத்தின் Bjorn Gulden 5ம் இடமும், Progressive நிறுவனத்தை சேர்ந்த Tricia Griffith 6ம் இடமும், Estee Lauder நிறுவனத்தின் Fabrizio Freda 7ம் இடமும், Mastercard நிறுவன சிஇஓ Ajay Banga 8ம் இடமும், Costco நிறுவன சிஇஓ Walter Craig Jelinek 9ம் இடமும், JP Morgan Chase நிதி நிறுவனத்தை நடத்தி வரும் Jamie Dimon 10வது இடமும் பிடித்துள்ளனர்.


இப்பட்டியலில் 8ம் இடம் பிடித்துள்ள Ajay Banga மற்றும் 18ம் இடம் பிடித்துள்ள Jayshree Ullal (Arista நிறுவனம்) ஆகியோரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.